Tuesday, 8 December 2009

காதலில் சில சமயங்கள்...


பேசிக்கொள்ளும் நேரங்கள்
எல்லாம் துளியெனவே நகர
பேசாத நேரங்கள்தான்
ஆழியாய் சூழ்ந்து
அழுத்துகின்றன
மனதை...

சிரிப்புக்கு காரணம்
கேட்கும் தோழிக்கும்
மறுமுனையில் மனம்
கெடுக்கும் உன்
கொஞ்சலுக்கும்
நடுவே
சிக்கி நான் படும் பாடு
உனக்கெப்படி
தெரியும்?


நாம் விலகி இருக்கும்
சமயங்களில் என்னுடன்
ஒட்டி உறவாடும் அலைபேசி
உன் கூட இருக்கும்
தருணங்களில்,
கொஞ்சமே சிணுங்கினாலும்
பெரிய எதிரியாய்
தோன்றுகிறதே, ஏண்டா?

வார்த்தைகள் தொலைந்து
மெளனத்தில் சிக்கி
நாம் இருவருமே
தவித்துப்போகும்
கணங்களில்
மேலும் அழகு கூடி
விடுகிறது காதலுக்கு...

கூடிக் களித்திடும்
கணங்களை காட்டிலும்,
பிரிவுகளில் தான்
அதிகமாய் உணரப்படுகிறது
காதல்...