Between Mind & Heart...
Saturday, 26 May 2012
நீ வருவாய் என...
எதிர்காலம் தேடி தொலைதேசத்தில் தொலைந்து
போயிருந்தாய் நீ...
உன் நினைவில் என்னை தொலைத்து கொண்டிருந்தேன்
இங்கே நான்...
ஒருநாள் உன்னுடன் வாழ்வேன் என்ற நம்பிக்கையில்...
உன் வரவை நோக்கி உன் வழித்தடத்தில் என் விழிகள்...
நினைவுகள் மட்டும் நாம் காதலின் சாட்சியாய் நாம் இடையே...
அன்பே நீ எப்படி இருக்கிறாய்?
இடம் மாறிய இதயங்கள் உன்னையும் துடிக்க வைக்கின்றதா?
ஏன் இந்த காதல் வலி?
உள்ளங்கள் இணைந்து உடல்களை பிரித்து ஏன்
இப்படிஒரு விதியின் விளையாட்டு?
உணர்வுகள் உறவாடி கொண்டிருக்க,
உடல்கள் தவித்து கொண்டிருகின்றன...
என்று தீரும் இந்த தனிமையின் வலி?
உன் பிரிவின் துயர் என் விழி வழி கசிந்து
என் இரவுகளை நனைகின்றது...
என் விடியலாய் நீ வருவாய் என...
Wednesday, 24 August 2011
Wednesday, 13 October 2010
கவிதைக்கும் எனக்கும் தூரம்...
கவிதைக்கும் எனக்கும் தூரம் என்றேன்.
பழகினால் புரியும் என்றாள்
பழகினேன் அவள் பேச்சே
கவிதையாய் இருந்தது
ஓ.. இது தான் கவிதையா என்றேன்
இல்லை இன்னும் சொல்லி தருகிறேன் என்று முத்தமிட்டு
இது வெண்பா என்றாள்
அடுத்தாய நடந்த ஒவ்வொரு நிகழ்வையும்
சீர், தளை, விருத்தம் என்றாள்
கவிதையை முழுதாய் புரிந்தேன்
இப்பொது மீண்டும் கவிதை எனக்கு தூரமாகிவிட்டது.
பழகினால் புரியும் என்றாள்
பழகினேன் அவள் பேச்சே
கவிதையாய் இருந்தது
ஓ.. இது தான் கவிதையா என்றேன்
இல்லை இன்னும் சொல்லி தருகிறேன் என்று முத்தமிட்டு
இது வெண்பா என்றாள்
அடுத்தாய நடந்த ஒவ்வொரு நிகழ்வையும்
சீர், தளை, விருத்தம் என்றாள்
கவிதையை முழுதாய் புரிந்தேன்
இப்பொது மீண்டும் கவிதை எனக்கு தூரமாகிவிட்டது.
Sunday, 26 September 2010
சில வார்த்தைகள், பல மௌனங்கள் ...
உயிர் வலிக்கும்போதும்
உள்ளம் அழும்போதும்
உனக்காக புன்னகை செய்யும் இதழ்களையும்
மறைக்கத் தெரியாத மௌனத்தையும்
என்ன செய்வேன் ?
உள்ளத்து உணர்ச்சிகளெல்லாம்
ஒன்று சேர்ந்து
என் உயிரைப் பறிக்கும்முன்பு
ஒருமுறை எதிரில் வந்துவிடு
உண்மையெல்லாம் சொல்லிவிடுகிறேன் !!!
உள்ளம் அழும்போதும்
உனக்காக புன்னகை செய்யும் இதழ்களையும்
மறைக்கத் தெரியாத மௌனத்தையும்
என்ன செய்வேன் ?
உள்ளத்து உணர்ச்சிகளெல்லாம்
ஒன்று சேர்ந்து
என் உயிரைப் பறிக்கும்முன்பு
ஒருமுறை எதிரில் வந்துவிடு
உண்மையெல்லாம் சொல்லிவிடுகிறேன் !!!
எல்லாம் மறந்த நாளொன்று...
எனக்கு முன்னே விழித்துக்கொள்ளும்
உன் நினைவுகளையும் ,
நான் உறங்கிய பின்னும் உறங்காத
உன் நினைவுகளையும் ...
என்னிடம் இருந்து எடுத்துச் சென்றுவிடு !
ஒரு நாளேனும் வாழ்ந்து பார்க்கிறேன்...
இந்த அழகான வாழ்கையை !!
உன் நினைவுகளையும் ,
நான் உறங்கிய பின்னும் உறங்காத
உன் நினைவுகளையும் ...
என்னிடம் இருந்து எடுத்துச் சென்றுவிடு !
ஒரு நாளேனும் வாழ்ந்து பார்க்கிறேன்...
இந்த அழகான வாழ்கையை !!
Friday, 10 September 2010
உனை விட்டுப் பிரிய மனமின்றி...
Quantcast
* நீ வெட்டி வீழ்த்தும்
நகங்கள் கூட
உன்னை
விட்டுப் பிரிய
மனமின்றி
தொட்டுத் தொங்குகின்றன.
* அறியாமையில்
மீண்டும் கடித்து
துப்புகிறாய்
உன்மேல் காதல்
கொண்ட நகத்தை.
* நீ வெட்டி வீழ்த்தும்
நகங்கள் கூட
உன்னை
விட்டுப் பிரிய
மனமின்றி
தொட்டுத் தொங்குகின்றன.
* அறியாமையில்
மீண்டும் கடித்து
துப்புகிறாய்
உன்மேல் காதல்
கொண்ட நகத்தை.
உன் கைங்கர்யம்...
Quantcast
* முன்னொரு மழைக்
காலத்தில்
மனம் வெந்து
உடல்குளிர
நனைந்து
உம்மிடத்தில் வந்தேன்.
* உடல் சூடேறி
மனம் குளிர்ந்தது
ஓர் நிமிடத்தில்
உன் கைங்கர்யத்தில்..
என்ன மந்திரம்
வைத்திருக்கிறாய்
உன்னிடத்தில்..
* முன்னொரு மழைக்
காலத்தில்
மனம் வெந்து
உடல்குளிர
நனைந்து
உம்மிடத்தில் வந்தேன்.
* உடல் சூடேறி
மனம் குளிர்ந்தது
ஓர் நிமிடத்தில்
உன் கைங்கர்யத்தில்..
என்ன மந்திரம்
வைத்திருக்கிறாய்
உன்னிடத்தில்..
Subscribe to:
Comments (Atom)



