Wednesday, 30 September 2009

en anbu kathalaney........

en anbu kathalaney en asaihal sollava?
allathu en ekkangalai sollava?
unathu pirivin sogathaiya?
illai unakaga kathirundhathaiya?
un ninaivilkalil mattum valthathai sollava?
illai unnai kana thudikum en pulankalin thavipinai sollava?
unakaga vala vendum endra en kanavugalaya?
illai en thanimayin kodumaiyaya?
ethai muthalil solven un suvasa kaatru ennai thodukayill???!!!

மழை நாளொன்றில்.......

ஆகாயம் ஆனந்தமாய் பொழிந்த
அடைமழை நாளொன்றில்
கொஞ்சம் நனைந்து நீயும்
கொஞ்சம் நனையாமல் நானும்
ஒரே குடையில் நாமிருவரும்
குடைக்குள் மொத்தமாய்
நனைந்திருந்தது நம் காதல்...

2 வயது சிறுவனின்
2 வருட தவத்திற்குக்
கிடைத்த வரம் நீ...?
ஆம்,
நான் பிறந்து
2 வருடத்திற்குப்
பிறகு தானே நீ பிறந்தாய்....

2 நிமிடம் காத்திருந்ததற்காக
என் மேல் கோபப்படுகிறாய்
நான் கூடத்தான்
பிறந்து 2 வருடங்களாக
உன் பிறப்பிற்காகக் காத்திருந்தேன்
அதற்காக
ஏன் இவ்வளவு தாமதமாகப்
பிறந்தாயென்று
உன் மேல் கோபப்படவா முடியும்...?

ஏழு வண்ணத்திலும்
வெட்கப்படும் வானவில் நீ
என் கைகளின் அணைப்பிற்குள்
இருக்கும் போது மட்டும்
எட்டாவது வண்ணத்திலும்
வெட்கப் படுகிறாய்...

எத்தனை முறை சொன்னாலும்
கேட்பதே இல்லை
உன் விரலையாவது
தொட்டுவிட்டுத்தான் போவேன்
என்று அடம்பிடிக்கிறது
இந்த மழைத்துளி
அதற்கும் என்னை போல்
பிடிவாதம் கொஞ்சம் அதிகம் தான்...

மழையில் நனைந்தபடி
யாருமற்ற புல்வெளியில்
என் கைப்பிடித்து நடந்தாயே
அன்று போல்
என்றும் உணர்ந்ததில்லை
நிறைவான நம் காதலை...

துளி மழை
தூரல் மழை
சாரல் மழை
அடை மழை
ஆலங்கட்டி மழை
ஏன்
அமில மழை கூடப்
பார்த்திருக்கிறதாம்...
உன் பாதம் பட்டதில் தான்
முதன் முதலாய்
அமிர்த மழை
பார்க்கப் போவதாய்
பெருமை பட்டுக்கொள்கிறது
இந்த பூமி....

சட்டெனப் பொழியும்
முத்த மழையின் போது
உன் மின்னல் வெட்கத்தில்
என் கண்களும் சேர்ந்தே
மூடிக் கொள்கின்றன
இப்போது தான் புரிகிறது
முத்தமிடும் போது ஏன்...?
கண்கள் தாமாகவே
மூடிக்கொள்கின்றனவென்று...

மழை நின்ற பின்னும்
தொடரும் மண்வாசம் போல்
நீ
விலகிச் சென்ற பின்னும்
விலகாமல்
என்னைத் தொடர்கிறது
உன் வாசம்...
நீ
என்னை
மீட்கும்வரை
நான் கனவுகளில்
முழ்கிஇருப்பேன் என் செல்லமே!!!!!

எனக்கான தீர்ப்புகள்........

நிறைய எழுதவேண்டியதிருக்கிறது
என்னைப் பற்றி.
எதையும் பற்றாமல்
எதைப்பற்றியும் இல்லாமல்
என்னைப் பற்றிக்கொண்டு எழுதியாகவேண்டும்.
எனக்கு மட்டும் தெரிந்த
வலி
கனவு
வாழ்க்கை
கண்ணீர்
கவிதை
நீ
நான்
நாம்
அவர்கள்
அனைத்திற்குமான தீர்ப்புகள்
எழுதியே தீர வேண்டும்.
உச்சரிக்கும் முன்பே
ஊமையாகிப் போன
பேனாவை வைத்துக்கொண்டு
எதை எழுதுவது?
உன்னை
எழுதுவதால் மட்டுமே
பிழையான என்
கவிதைகளும்
பிழைக்கின்றன.....

உன்னோடு இருந்திருப்பேன்…

உன்னோடு இருந்திருப்பேன்…

சுகம் தரும் உலகம் தான்,
பல நண்பர்கள் என்னோடு,
விரும்பிய நேரமெல்லாம் விளையாட்டு தான்;
இருந்தென்ன பயன்
உன் சுட்டு விரல் தீண்டலின்றி?
உன் கணினியாய் நானிருந்திருந்தால்
உன் ஸ்பரிசமாவது கிடைத்திருக்கும்….

காதல் என்ன மாய உலகமா??????

காதல் என்ன மாய உலகமா இல்லை கானல் நீரா , நினைவுகளுடன் கண்ணாம் பூச்சி ஆடுகின்றது ....
ஒவ்வொரு நொடியும் வுயிரை யுருகி , மனதை ரனமாகுகின்றது

என் இந்த ஏக்கம் , இத்தனை தவிப்பு ??

இத்தனை வருடங்கள் எங்கே இருந்தன என் ஆசைகள்.....???!!!
எதற்கும் பதில் கிடைக்காத கேள்விகள்?
என்னவனே !!!....என் வுயிரில் கலந்திடு விரைவில் ..!!!
கனவுகளில் தொலைந்த என்னை மீட்க வா !!!
உன் வரவிற்காக ஏங்கும் உன் செல்லம்...

என் உயிர் காதலியே........

அழகில் நீ தேவதை,
அன்பில் நீ ராட்சசி,
காதலில் நீ கவிதை,
கவிதையில் நீ காவியம்,
மொத்தத்தில் நீ அழகு ஓவியம்!!!!!!
உன் பார்வையில் என் மேல் பாசங்கள்,
உன் நேர்மையில் என் மேல் நேசங்கள்.....
உன் காதலினால்தான் இன்று நான்!!!!!

இதோ கனவினில் தொலைந்த உன்னை மீட்க
உன் உயிரில் கலந்திட ஓடோடி வருகிறேனடி என் அழகான ரத்சஸியே.......

தொலைகடல்......



விரல் பற்றும் தொலைவில்
எப்போதும் இருப்பதில்லை
உன் இருத்தல்.
கடிகார முள்ளில்
சிக்கித் துடிக்கும்
மீனாக
நம் ப்ரியங்கள்.
கனவுகளின் கறுப்புவெள்ளை
பிரதேசங்களெங்கும் பொழிகிறது
உன் குரல்மழை.
தூரத்திலிருந்தும்
அதே குறுநகையுடன்
எப்போதும் எனக்குள்
வசிக்கிறாய்

நீ தான்.......

என் காதல் தேசமும் நீ தான்
என் காதல் சுவாசமும் நீ தான்
என் வாழ்வின் உறவுகள் நீ தான்
என் பிரிவின் சோகங்கள் நீ தான்
மனசு எழுதும் கவிதைகள் நீ தான்
கவிதையில் மலரும் உணர்வுகள் நீ தான்

நான் பேசும் மௌனங்கள் நீ தான்
நான் கேட்கும் வார்த்தைகள் நீ தான்
நான் போகும் பாதையும் நீ தான்
நான் வாழும் வாழ்க்கையும் நீ தான்
நிலவு உறவாடும் வானமும் நீ தான்
நினைவு உறவாடும் நெஞ்சமும் நீ தான்
அலைகள் உறவாடும் கரைகளும் நீ தான்
அன்பாய் உறவாடும் உயிரும் நீ தான்

நான் பாடும் ராகமும் நீ தான்
நான் தூங்கும் தலையணை நீ தான்
நான் காணும் உருவமும் நீ தான்
நான் தேடும் ஜீவனும் நீ தான்
பூமியில் சிந்தும் மழைத்துளி நீ தான்
பூக்கள் மலரும் சோலையும் நீ தான்
நெஞ்சினில் தவளும் நினைவுகள் நீ தான்
விழியினில் மலரும் கனவுகள் நீ தான்

கொஞ்சலோ கொஞ்சல்..





ஓயாமல் நீ பேசிக்கொண்டே
இருப்பதாக ரொம்ப
பீற்றிக்கொள்ளாதே !!
பேசவே முடியாதபடி
உன் உதடுகளைக் களவாடி
விடும் திருட்டு உதடுகள்
என்னுடயவை...









உன்னை வெட்கப்படவைத்து
நான் படுத்தியெடுப்பதாக
அழகாக சலித்துக்கொள்கிறாய்
உன் வெட்கங்கள் என்னைப்
படுத்தும் பாடு உனக்கென்னடி
தெரியும் செல்ல குரங்கே









எப்பொழுதும் நான் தான்
கேட்கவேண்டுமா ?
ஏன் நீயாக கொடுக்க மாட்டாயா என
கேட்கிறாய்
நீ கேட்கும்போது
வழியும் உன் நாணக்குரல்
என்னையே வெட்கப்படுத்துவது
தெரியுமா..?











நல்ல பிள்ளையாகத்தான்
இருக்கின்றன
இந்த விரல்கள்
நீ அருகினில் வரும் வரை













ஏதோ ரகசியம் சொல்கிறேன்
என அருகினில்
அழைத்து நீ
செய்ததை
இனி ரகசியமாகத்தான்
வைக்கவேண்டும்
ச்ச்சீய் போடா...








இது தப்பில்லையா
என என் உதடுகள்
உன் உதட்டுக்குள்
கேட்டபோது
தப்புதான்
இப்படி கேட்பது
என்கிறாய்
ஹய்யோ போடா..










நம் பெயரை என் மார்பினில்
எழுதத்தான்
இவ்வளவு கூர்மையாக
நகங்கள் வளர்த்தாயாடி..?
நானும் எழுதட்டுமா என்றால்
மட்டும் இப்படி ஓடினால் எப்படி?






சமையல் அறைக்கெல்லாம்
வராதே என நீ சொன்ன
பின்புதான் தெரிந்தது
அங்கே அணைக்க வேண்டியது
அடுப்பை மட்டும் அல்ல
என்று...








எங்கே ஒளித்துவைத்திருந்தாய்
இவ்வளவு காதலையும்
எனக்கேட்டால்
மனதினில் தான்
என சாதாரணமாகச்சொல்கிறாய்
இரு இரு அங்கே இன்னும்
என்னவெல்லாம்
ஒளித்து வைத்திருக்கிறாய்
என கண்டுபிடிக்கிறேன்








உன்னைக்
கொஞ்சும் வேலையை
என் உதடுகளுக்கும்
கெஞ்சும் வேலையை
என் விரல்களுக்கும்
கொடுத்துவிட்டு
நான் ரசிக்கும் வேலையை
மட்டும்தான்
செய்துகொண்டிருக்கிறேன்
திருப்தியாடி..?










பேசப் பேச வழியும்
உன் நாணங்களையும்
உன் மனதுக்குளிருந்து
எட்டி எட்டிப்பார்க்கும்
எனக்கான உன் காதலையும்
சேமித்துவை
என்னுடைய வரதட்சிணையே
அவைதான்...








என்னைக் காக்க வைத்த
ஒவ்வொரு நொடிக்கும்
சரமாரியாக
எங்கு வேண்டுமானாலும்
முத்தம் வழங்கும் தண்டனையை
உனக்கு
நிறைவேற்றப்போகிறேனடி...
தயாராக இரு








கொஞ்சிக் கொஞ்சியே
என்னிடம் காரியம் சாதிக்கிறாய்
என குற்றம் சுமத்தாதே
உன் தாய்க்குப்பின் உன்னை
நெஞ்சினில் சுமக்கும்
என் காதல் குழந்தையை
நான் கொஞ்சாமல்
வேறு யார் கொஞ்சுவார்கள்







ஏன் இப்படி இருக்கிறேன்..?
உன்னைக் காதலித்தபின்
வேறு பெண்களே என்
கண்களுக்கு தெரியவில்லையே..
என்னடி செய்தாய் ..?







மார்போடு என்னை
சேர்த்தணைத்தபோது
ஒரு தாய் போல
உணர்ந்தேன் உன்னை
தெரியுமாடி..?








நான் ஏன்
உன் மனைவியாக
வரவேண்டும்
என நீ
கேட்பது
ஏன்
உனக்கு மூச்சு வேண்டும்
எனக் கேட்பதுபோல்
இருக்கிறது

Saturday, 26 September 2009

மூன்றாம் பால் !!!!!!



பூங்குழலி ஆரணங்கு
தேன்வடியும் பூவதரம்
தீஞ்சுவைக்கவில்லையடி
தெவிட்டாத
தேனமுதே !


நான் சுவைக்க
வந்தருகில்
இழுத்தணைத்து
வைத்துவிடு
நாணமென்ன
நீ மொழிவாய்
ஆதவனை
தூங்கச்சொல்வேன்

கொல்லும்
விழியிரண்டை
இழுத்தணைக்கும்
இமைகளென
நித்தம் தழுவிடுவேன்
மூழ்கி
முத்தமெடுப்பேன்
மூர்ச்சையாகும் வரை !

பேதை
உன் வாயில்
ஊறும்
கள்
போதை
நித்தம் குடித்திடுவேன்
சித்தம்
போகும்வரை!


நானணைத்தால்
நாணலாடை
நாற்பதடி
போய்விழுமே
நான் விலகும்
போதினிலே
மீண்டும் ஒட்டிக்
கொள்ளுவதேன் ?


வெட்கஆடை
நீயணிந்து வெப்பமாக
வந்து நின்றால்
வேலியோரம்
உள்ள ஆசை
வேங்கையாகப்
பாய்ந்திடுமே

களைந்திடுவேன்
இருஆடை
களையாத
கூந்தலாடை
கலைந்திடுமே
தினம் காலை
சொல்லிடுமே
நம் காதை


இன்னும் என்ன
நாணமுகில்
பொழிந்திடுவாய்
காதல்மழை
இரைதேட
தொடங்கிடுவோம்
இருவருமே
களைக்கும்வரை...

களித்த இரவு...



நன்றாக நினைவிருக்கிறது
குளிரான அந்த இரவு
நீண்ட நாட்களுக்குப்
பிறகு
சந்திக்கிறோம்
யாருக்கோ
திருமணம்
சாக்கு போக்கு சொல்லி
வந்திருக்கிறேன்
உன்னைப் பார்க்கதான்

எனக்கும் உனக்கும்
மட்டும் புரிகிறது
கரும்புகள்
இனிக்கமட்டும்
செய்வதில்லை
இரவு விழிக்கிறது
நம் உணர்வுகளும்
நீண்ட நாட்களாக
இரையில்லை

கொட்டிக் கிடக்கிறது
நம்முன் அடர்த்தியான
தனிமை
ஏக்கமான
உணர்வுகளோடு
துவங்கத்தான்
நினக்கையில்
துவள்கிறது எல்லாம்


என்று தணியும் என்று
விம்மித்தணியும்
மார்புகள்
இன்றே தணியென
அலரும் கொலுசுகள்
காற்றில் பரவும்
வெப்பமான
மூச்சுக் காற்று
எச்சில் பட
ஏக்கமாகும்
உதடுகள்


வீசும் காற்றிலெல்லாம்
மூச்சுக்காற்றின்
வெப்பம்
கானல் தெரித்த
இரவு
ராக்கோழிகளின்
கூவல்கள்
கூர்க்காவின்
விசில் சத்தம்
அலறாமல்
அலறும் நம்
உணர்வுகள்

அணைத்தாலும்
அணையாத தீ
தீண்டத் தீண்ட
தூண்டப்படுகிறது
சிம்மினியாக
தொடங்கி
காடா விளக்காக
காற்றினில் காந்தல்!
தனிமையின்
கொடுமை
வேரருக்கப்படுகிறது

களித்த இரவு
கழிகிறது
இரவு கொன்ற
களிச்சிரிப்பில்
காலானாய்
ஆதவன்
சில இரவுகள்
ஏன் நீள்வதில்லை ?

ஆதலினால் காதல் செய்வீர் !!!





பேசாமல்
இருக்க மாட்டியா?
என்கிறாய்
விரல்களுக்கு
ஏது காதுகள் ?



கொஞ்ச நேரம்
சும்மா இருக்க
சொல்கிறாய்
கொஞ்சும் நேரம்
கொஞ்சநேரமாய்
எப்படி
இருக்கும் ?




யாராவது
வந்துவிடப்போகிறார்கள்
என்றபடியே
நெருங்குகின்றன
நம்
இதழ்கள்!



ஒவ்வொரு முறையும்
சீக்கிரம் போகவேண்டும்
என்கிறாய்
நமது சீக்கிரம்
அவ்வளவு சீக்கிரமாய்
வருவதில்லை !




ஏன் என்னை இப்படி
படுத்தரே ? கோபத்துடன்
கேட்கிறாய்
இருந்தும் எனக்காக
ஈரமாகின்றன
உன் உதடுகள் !




சுரிதாரிலே
நல்லா இருக்கேனா ?
இல்லை சேலையிலே
நல்லா இருக்கேனா ?

ரெண்டுலயுமே நல்லாதான்
இருப்படா நீ
ஆனா ரெண்டுமே
இல்லாமலும்
நல்லா இருப்ப !

சொன்ன பதிலுக்காக
நீ கிள்ளிய இடத்தில்
காதல் கட்டிக்கொண்டதடி !



போதும் என
எப்போதாவது
சொல்லி இருக்கிறாயா?
சிணுங்களுடன்
குனிகிறாய்
என் முகம் நோக்கி !!




நான் விட்டு விட்டு
சென்று விட்டால் என்ன
செய்வாய்?
ம்ம் கொலை செய்து
விடுவேன்
உன் காதலை !!
நீதான் என் காதல்
அப்படியென்றால்..?

காதல்சந்தம்...




நான் உன்னிடம்
பேசப்போவதில்லை
என என்னிடம்
பேச ஆரம்பிக்கிறாய்


















ஏன் என்னை
காதலித்தாய் என
மீண்டும் மீண்டும் கேட்கிறாய்
ஏன் என்னை
பெற்றாய் என
தாயிடம் கேட்பதைப்போல



















நீ வராமல் காலம் தாழ்த்தியபோது
உருவான கோபப்புயல்
தூரத்தில் நீ வருவதைப்
பார்த்த நொடியே
வழுவிழந்து கரையைக்
கடந்தது.














அவளையே பார்த்துக்கோ
என்னை விட்டு விடு
என என்னிடம்
இன்றைய ஊடலை
ஆரம்பிக்கிறாய்






















உன் பிறந்த நாளுக்காக
நான் வாங்கித்தந்த
உடையை
ஏன் என்னிடம்
அணிந்து காட்டவில்லை
எனக்கேட்டால்
என்னைக்
கிள்ள ஆரம்பிக்கிறாய்
ததும்பி வழிகின்ற
உன் அழகான நாணத்துடன்














உன்னிடம் பேசும்
நேரத்தை விட
உன்னிடம் ஊடும்
நேரத்தில்தான்
உன்னை
அதிகம் நினைக்கிறேன்
என சொன்னதற்காக
என்னிடம்
சண்டையைத் தொடங்குகிறாய்







நான் பரிசளித்த
டாலர் கோர்த்த
செயினை
ஏன் அணியவில்லை
என நான் கோபமாக
கேட்டதற்கு
அணிந்திருக்கிறேன் என
நீ எடுத்துக்காட்டியபோது
பொறாமையாக
இருந்தது
டாலருக்கு மட்டும்
ஏன் இந்த கொடுப்பினை என்று

முத்தச்சந்தம்


காதல் ஜோதி




பிரகாரத்தை நீ
சுற்றுகிறாய்
நானோ
உன்னைச்சுற்றுகிறேன்






காதல் பயணம்





வேகத்தடையை
என்னமோ
நாம் பயணம் செய்த
பைக்
வேகமாக
கடந்துவிட்டது
ஆனால் என்
மனதோ
ஏன் சாலை
முழுதும்
வேகத்தடையில்லை
என கேட்கிறது







அப்படியெல்லாம் பார்க்காதே
அப்படியெல்லாம்
என்னைப் பார்க்காதே
என் மனதில்
அதிவிரைவாக
காதலுற்ற
முத்த மண்டலம்
உருவாகின்றது !




Image Hosted by ImageShack.us




எனது உதடுகளுக்கும்
உனது உதடுகளுக்கும்
இன்று ஒரே விருந்தாம்
இறுமாப்பில் அவை
பேசவே விடவில்லை
நம்மை!






Image Hosted by ImageShack.us




இத்தனைபேர்
மத்தியிலும்
எனக்கு முத்தம் கொடுக்க
முடியுமா?
என கேட்டதற்கு
கொடுத்தால் தனிமையில்
தருவேன் என்ற
பந்தயத்தில் ஜெயிக்க
ஏதோ ரகசியம் சொல்வதுபோல்
என் காதினில்
முத்தமிட்டுவிட்டு
ஒரு சிரிப்பு சிரித்தாயே
அந்தச் சிரிப்பை
இன்னும் என் காதல்
சுமந்து கொண்டு இருக்கிறது .






இன்று என்னுடன்
பேசாதே என நான்
கூறியதற்காய்
ஏன் கோபித்துக்
கொண்டு அமர்திருக்கிறாய்?
பேசினால் நம்
உதடுகள்
ஏங்கிப்போய்விடாது ?








உனக்கு மிகவும்
பிடித்த இசை
என்னவென்று
நீ கேட்டதற்கு
நான் சொன்ன
பதிலைக்கேட்டவுடன்
ஏன் உன்
கன்னங்கள்
சிவக்கின்றன ?

பின் எப்படி பார்ப்பதாம்?


மஞ்சள் தேவதை




உன்னை முதன் முதலில்
அந்த மாம்பழ நிற
பட்டுப்பாவாடையில் பார்த்ததும்
எனக்குத்தோன்றியது
தேவதைகள் வெள்ளை
உடைகளில் தான்
வரவேண்டுமா என்ன ?






எப்படி இப்படி







கோவிலுக்கெல்லாம்
இப்படி வராதே
பார்
வருபவர்களெல்லாம்
உன்னைப்
பார்த்து கன்னத்தில்
போட்டுக்கொள்கிறார்கள்




அம்மன்



முதலில் இப்படி
பார்ப்பதை விடு
என்கிறாய்
கர்ப்பகிரகத்துக்குள்
இருக்கும் என்
தெய்வத்தை
பின் எப்படி
பார்ப்பதாம் ?




பாவம் அம்மா




இப்பொழுதெல்லாம்
கோவிலுக்கு
தவறாமல் வருகிறேன்
எனக்கு பக்தி
வந்து விட்டதென
என் அம்மா மிகுந்த
ஆனந்தப்படுகிறார்கள்
பாவம் அவர்களுக்கு
தெரியாது
என் பக்தி
கர்பகிரகத்துக்குள்ளிருக்கும்
அம்மனுக்காக அல்ல
அதைச் சுற்றிக்
கொண்டிருக்கும்
அம்மனுக்காக
என!




அப்படி பார்க்காதே




அப்படிப் பார்க்காதே
எனக்கு வெட்கமாக
இருக்கிறதென
முகத்தினை திருப்பிக்
கொள்கிறாய்
இருப்பினும்
என்னை நோக்கி
சிரிக்கிறது
எனக்கான உன்
உன் வெட்கம் !









அன்று
என் எதிர் வீட்டு
குழந்தையை நீ
கொஞ்சிக்கொண்டிருந்த
போதுதான்
தவழ ஆரம்பித்தது
உன்னை நோக்கி என்
மனது !








நம் பயணத்தில்
திடீரென குறுக்கே
வந்துவிட்ட
அந்த
மிதி வண்டிக்காரனை
என்னால் திட்ட
முடியவில்லை
வாழ்த்தத்தான்
தோன்றுகிறது
நீ என்
பின்னால் அமர்திருக்கும்
வேளைகளில் !