Saturday, 26 September 2009

களித்த இரவு...



நன்றாக நினைவிருக்கிறது
குளிரான அந்த இரவு
நீண்ட நாட்களுக்குப்
பிறகு
சந்திக்கிறோம்
யாருக்கோ
திருமணம்
சாக்கு போக்கு சொல்லி
வந்திருக்கிறேன்
உன்னைப் பார்க்கதான்

எனக்கும் உனக்கும்
மட்டும் புரிகிறது
கரும்புகள்
இனிக்கமட்டும்
செய்வதில்லை
இரவு விழிக்கிறது
நம் உணர்வுகளும்
நீண்ட நாட்களாக
இரையில்லை

கொட்டிக் கிடக்கிறது
நம்முன் அடர்த்தியான
தனிமை
ஏக்கமான
உணர்வுகளோடு
துவங்கத்தான்
நினக்கையில்
துவள்கிறது எல்லாம்


என்று தணியும் என்று
விம்மித்தணியும்
மார்புகள்
இன்றே தணியென
அலரும் கொலுசுகள்
காற்றில் பரவும்
வெப்பமான
மூச்சுக் காற்று
எச்சில் பட
ஏக்கமாகும்
உதடுகள்


வீசும் காற்றிலெல்லாம்
மூச்சுக்காற்றின்
வெப்பம்
கானல் தெரித்த
இரவு
ராக்கோழிகளின்
கூவல்கள்
கூர்க்காவின்
விசில் சத்தம்
அலறாமல்
அலறும் நம்
உணர்வுகள்

அணைத்தாலும்
அணையாத தீ
தீண்டத் தீண்ட
தூண்டப்படுகிறது
சிம்மினியாக
தொடங்கி
காடா விளக்காக
காற்றினில் காந்தல்!
தனிமையின்
கொடுமை
வேரருக்கப்படுகிறது

களித்த இரவு
கழிகிறது
இரவு கொன்ற
களிச்சிரிப்பில்
காலானாய்
ஆதவன்
சில இரவுகள்
ஏன் நீள்வதில்லை ?

No comments:

Post a Comment