Thursday, 29 October 2009
அடி கள்ளியே!!!!!
என் மெத்தை தேவதையே!
காதலின் மிச்சமே காமம் என்று நினைத்திருந்தேன்
உன்னை பார்த்ததும் என் நினைப்புகள் மாறுவதும் ஏனோ?????
மோகம் தீர்ந்த மூச்சிரைப்பின் முடிவில்
என் மார்பில் முழுமையாய் நீ!
அந்த பால்நிலவு வெட்கப்பட்டு சிவந்ததடி என் உயிரே!!!!!
கேட்டதும் கொடுத்துவிட்டால் கட்டிலுக்கு அழகில்லையாம்!
யாரோ என்னிடம் பிதற்றினார்கள்
ஆனால் இன்றோ அதை அப்படியே உண்மையக்கிவிடயடி!!!!!
மோகத்தின் வேகத்தில்
நீயும்,நானும் கவனிக்கவில்லையடா!
அந்த மெத்தையும்,கட்டிலும் நம்மை பார்த்து
நமுட்டு சிரிப்பு சிரித்ததை...
உன்னிடமிருந்து விலகி இருக்க நான் நினைத்திருந்த வேளையில்
என் விரல்கள் உன்
கூந்தலில் சிக்கிக்கொண்டிருந்தன!!!!!
பெரிய திருடன் நான் என்றிருந்தேன்,
களவாடிய பிறகே தான் புரிந்தது!
திருடன் நான் இல்லை.
நீதான் திருடி என்று [என்னையும்,என் காதலையும்]!!!!!
அவ்வளவு மிக மிக அருகில் அமர்ந்து கொண்டு
'என்னில் என்ன பிடிக்கும்?' என்றால்
நான் எதை சொல்ல ?
எதை விட ?
ஏன் என்னை இப்படி இம்சிகிறாய்
நான் பாவம் இல்லையா?????
பதில் சொல்லடி என் செல்லத்தின் செல்லமே!!!!!
Tuesday, 6 October 2009
ஏனடி என்னை அழவைக்கிறாய் ??????
ஏனடி என்னை அழவைக்கிறாய் ?
இத்தனை அழகாய் இருக்கின்றாய் ;
இத்தனை அழகாய் சிரிக்கின்றாய் ;
இத்தனை இத்தனை அழகாய் இருந்தும் ;
ஏனடி என்னை அழவைக்கிறாய் ?
என் உயிரின் ஊடே நீ கலந்தும் ;
ஏனடி என்னை அழவைக்கிறாய் ?
உனக்கென உயிர் தர நான் இருந்தும் ;
ஏனடி என்னை அழவைக்கிறாய் ?
என் உள்ளும் புறமும் நீ இருந்தும்
ஏனடி என்னை அழவைக்கிறாய் ?
உறவுகள் தவிர்த்தும் ;
உணர்வுகள் தொலைத்தும் ;
நீ “உம் ” என்றால் உயிர் துறக்க நான் இருந்தும் ;
ஏனடி என்னை அழவைக்கிறாய் ?
தென்றல் தீண்ட வலிக்கு மென்றும் ;
பூவை சூட தலை கணக்கு மென்றும் ;
நடந்தால் பாதம் நோகுமென்றும் ;
இதயத்தில் ரத்தத்தை வெளி ஏற்றி ;
இரு கண்களையும் காவல் வைத்து ;
இரவில் உன்னை தூங்க வைத்தும் ;
ஏனடி என்னை அழவைக்கிறாய் ?
என் இதழை தலையணை ஆக்கி வைத்தும் ;
என் இரவுகளால் உன்னை போர்த்தி விட்டும் ;
என் மூச்சு காற்றால் மிதப்படுத்தியும் ;
என் கண்ணீரால் உன் தாகம் தீர்த்தும் ;
ஏனடி என்னை அழவைக்கிறாய் ?
எனக்காய் அழுவதற்கு என் சொந்தம் பலவிருந்தும் ;
உனக்காய்.….
உனக்கு மட்டுமாய்.,,,
ஏனடி என்னை அழவைக்கிறாய் ?
எப்படி மறப்பேன் என்னவளே.?!..

ஊடலின் உச்சத்தில்,
பரிகாச வார்த்தைகள்.!,
கூடலின் மிச்சத்தில்,
கூந்தற் பூ வாசங்கள்.!,
உள்ளங்கை வெட்கத்தில்,
சிவந்து போன மருதாணி.!,
சீலைத்தலைப்பில் என்னை கிடத்தி,
இரண்டாம் தாலாட்டு.!,
கழுத்தூறும் வியர்வைத்துளி
முன்னேறாமல்..,
துடைத்துத்தடுத்த முந்தானை.!,
கதை சொல்லி தூங்கிய பின்னும்
கடைக் கண்ணில் குட்டி விழிப்பு.!,
அக்குளில் அழுக்குப் பதியம்..,
ஆயிரம் பூவாசம்.!,
விரல் பிடித்து நகம் கடிக்கும்
விசித்திரத்தாய்மை.!,
குறுந்தாடி மழித்தெடுக்க.,
நுரை போடும் தோழமை.!,
எழுதிய கவிதையில் பிழைதிருத்தும்
முதல் ரசனை.!,
தேவை தெரிந்து சேவை செயும்
கண் கருணை.!,
நீயழுது நானழுதால் துடைக்கவரும்
பத்துவிரல்.!,
விலகிய நாட்களெல்லாம் விலக்காமல்.,
கட்டியணைத்து தூங்கும் காதல்.!,
தூக்கத்தில் சட்டென விழித்தால்.,
தலைமாட்டில் செருப்புவைக்கும்
பழகிய பாசம்.!,
வாசல் வரைவந்து என்னாடை சரிசெய்து
முத்தமிட்டு வழியனுப்பும்.,
அவசியமான அக்கறை.!,
சனிக்கிழமை எண்ணைக்குளியல்.,
சாப்பாட்டில் கீரைத்துவையல்.,
மதியவுணவு மீதம் வந்தால்
தலையில் குட்டும் இரண்டாம் தாய்மை.!,
ஏகத்துக்கும் என்னைப்புகழும்
என் பக்தை.!,
ஆசைப்பட்டு ஒன்றைக்கேட்டு.,
செலவாகும் வேண்டாமெனும் குடும்பத்தனம்.!,
காயத்திற்கு மருந்து கட்டு.,
நெற்றியில் திருநீற்றுப்பொட்டு.,
இரவெல்லாம் தூங்காமல்..
வைத்தியம் பார்க்கும் பைத்தியக்காரி.!,
என் பசிபோகப்பரிமாறி.,
பட்டினி கிடக்கும் பத்திநித்துவம்.!,
சாக்காலப்படுக்கயிலும் - என்னை
குளிப்பாட்டும் கடைசி செவிலி.!,
எப்படி மறப்பேன் என்னவளே..,
Monday, 5 October 2009
நீ பொக்கிஷம்!!!!!!!!
முடியாமல்
கொட்டிவிடுகிற
கவிதைகளை
பொறுக்கி எடுக்கிறேன்
நீயோ
`பொறுக்கி` என்று
திட்டுகிறாய்
மற்றவர்களோ
கவிஞன்
என்கிறார்கள்...
அழகு நிரம்பி வழிகிறது கவிதையாய்...
நிரம்பி
வழிகிறது
கவிதையாய்...
நீ என்ன
அழகின்
அட்சய பாத்திரமா
இத்தனை
கவிதைகள்
நிரம்பி
வழிகிறதே....
மயிலிறகு
குட்டி போடுகிறதோ
இல்லையோ
உன் நினைவுகள்
குட்டி போடுகின்றன
கவிதைகளாக....
தெரியாத
தூரத்தில்
நீ இருந்தாலும்
தெரிவித்து
விடுகின்றன
கவிதைகள்....
என் பிறப்புக்கும்
இறப்புக்கும்
இடையே
வாழ்தல்
இருக்கிறதோ
இல்லையோ
காதல்
இருக்கிறது...
Sunday, 4 October 2009
ஐம்புலனிலும் அவளை வை!!!!!!!
ஐம்புலனிலும் அவளை வை!
கண்டும் கேட்டும் உண்டும் நுகர்ந்தும் தொட்டும்
இன்புறும் ஐம்புலன்களின் இன்பமும் ஒன்றாய்
இருப்பது பெண்ணிடம் மட்டுமே என்று அடித்துச்
சொல்கிறது திருக்குறள்.
உன் காதலியும் இப்படித்தான்
உன் ஐம்புலன்களையும் சொக்கவைக்கப் போகிறாள்.
ஆனால், அதற்கு முன்…
உன் ஐம்புல னாலும் அவளை நீ காதலி.
கண்களில் அவள் உருவத்தை வை
காதுகளில் அவள் குரலை வை
சுவாசத்தில் அவள் வாசம் வை
உதடுகளில் அவள் பெயரை வை
உணர்வில் அவள் உயிரை வை!
Thursday, 1 October 2009
காதல் செய்துபாருங்கள்!!!!!!!!

காதல் மிகப்புனிதமானது, அதை விளையாடி வீணாக்கிவிடாதீர்கள்
சிறுவயதிலும் சின்னப்பிள்ளைத்தனத்திலும் செய்வது காதலல்ல
காதல் கடலைப்போன்றது
திருமணத்திற்குமுன் செய்யும் காதல்
அதன் கரையை மட்டும்
தொட்டு நிற்க்கவேண்டுமே தவிர, அதன் அலைகளுடன்
விளையாடினால் சுனாமிபோல் சுருட்டிகொண்டு போய்விடும்
திருமணத்திற்குப்பின் வரும் காதல் ...
பேரலைகளையும் தொட்டு கூத்தாடினாலும்
அதனுள் மூழ்கியபோதும் முத்துடன்தான் வருவோமே தவிர
மூச்சடைத்து விடமாட்டோம்
திருமணத்திற்கு பின் காதல் செய்துபாருங்கள்
அதன் ஆழம் தெரியும்,
அதன் அன்பு புரியும்,
அதன் மதிப்பு தெரியும்
காதல் கண்ணியமானது
அதை கலங்கப்படுத்தி விடாதீர்கள்!!
கணவருடன் காதல் செய்து பாருங்கள், காதலுடனே வாழ்ந்துபாருங்கள்!!
நம் வாழ்க்கைக்கு பின்னும் காதல் வாழும்!!
புதிய பார்வை...
இன்று பார்த்த பார்வை
இதுவரை பார்க்கவில்லை!
இன்று தோண்றிய எண்ணம்
இதுவரை தோண்றவில்லை!
இன்று சொன்ன வார்த்தை
இதுவரை சொன்னதில்லை!
உன்னை பற்றி கவிஎழுத
இதுவரை நினைக்கவில்லை!
இன்று எழுத நினைத்தாலும்
வார்த்தைகள் சிக்கவில்லை!
உன்னை கவிதையாய் ரசிக்க
காரணம் தேவையில்லை!
ஆம்… எனக்கு
நீயும் ஒரு கவிதைதான்…
அன்புடன் நான் ரசிக்கும்
அழகான ” HI – KUU ” கவிதை…
காதல் கவிதைகள்......
என் விழியோரம் ஒரு நிழல்
என்கேயோ பார்த்த ஞாபகம்..
என் செவியோரம் ஒரு குரல்
எப்போதோ கேட்ட ஞாபகம்..
என் இதழோரம் ஒரு சுவை
எதையோ சுவைத்த ஞாபகம்..
என் மனதோரம் ஒரு சாரல்
எப்படியோ நனைந்த ஞாபகம்..
ஓ.! இப்போதுதான் புரிகின்றது!!
முற்பிறவியில்(லும்) நீதான் என்
வாழ்க்கைதுணை என்று…
—————-***—————-
அடடா !
உன்னிடம் கூடவா மறைத்துவிட்டேன்
என் வயதை..
நான் எப்படியடா சொல்வேன்…
உன்னைச் சந்தித்த நாளில்தான்
பிறந்தேன் என்று…
உன்னைக் கைப்பிடித்த நாளில்தான்
மலர்ந்தேன் என்று…
——————***—————–
இப்படியா பேசுவாய் ?????
சிரிக்கும்படி ஏதாவது சொல் என்றால்
” நான் உன்னை நேசிக்கிறேன்” என்கிறாய்
ரசிக்கும்படி ஏதாவது சொல் என்றால்
” நான் மிகவும் அழகானவன்” என்கிறாய்
கோபப்படும்படி ஏதாவது சொல் என்றால்
” நான் உன்னை பார்க்க வருகிறேன்” என்கிறாய்
பயப்படும்படி ஏதாவது சொல் என்றால்
” நான் அருகில்தான் இருக்கின்றேன் ” என்கிறாய்
ஆச்சர்யப்படும்படி ஏதாவது சொல் என்றால்
“நான் உன்னை வெறுக்கின்றேன்” என்கிறாய்
அதிர்ச்சி அடையும்படி ஏதாவது சொல் என்றால்
“நான் உன்னிடம் பேசமாட்டேன்” என்கிறாய்
சந்தோசப்படும்படி ஏதாவது பேசு என்றால்
“நான் அடுத்த ஜென்மத்தில் சொல்கிறேன்” என்கிறாய்
இப்படி பேசும் உன்னிடம் எப்படிதான் பேசுவது..
பேசாமல் இருந்தாலும் ஏதோ ஒன்று
குறைகின்றது.. ஏனெனில்
எனக்கு பிடித்தவர்கள் வரிசையில்
நீயும் இருந்து தொலைக்கின்றாயே..