Wednesday, 13 October 2010

கவிதைக்கும் எனக்கும் தூரம்...

கவிதைக்கும் எனக்கும் தூரம் என்றேன்.

பழகினால் புரியும் என்றாள்

பழகினேன் அவள் பேச்சே

கவிதையாய் இருந்தது

ஓ.. இது தான் கவிதையா என்றேன்

இல்லை இன்னும் சொல்லி தருகிறேன் என்று முத்தமிட்டு

இது வெண்பா என்றாள்

அடுத்தாய நடந்த ஒவ்வொரு நிகழ்வையும்

சீர், தளை, விருத்தம் என்றாள்

கவிதையை முழுதாய் புரிந்தேன்

இப்பொது மீண்டும் கவிதை எனக்கு தூரமாகிவிட்டது.

Sunday, 26 September 2010

சில வார்த்தைகள், பல மௌனங்கள் ...

உயிர் வலிக்கும்போதும்
உள்ளம் அழும்போதும்
உனக்காக புன்னகை செய்யும் இதழ்களையும்
மறைக்கத் தெரியாத மௌனத்தையும்
என்ன செய்வேன் ?
உள்ளத்து உணர்ச்சிகளெல்லாம்
ஒன்று சேர்ந்து
என் உயிரைப் பறிக்கும்முன்பு
ஒருமுறை எதிரில் வந்துவிடு
உண்மையெல்லாம் சொல்லிவிடுகிறேன் !!!

எல்லாம் மறந்த நாளொன்று...

எனக்கு முன்னே விழித்துக்கொள்ளும்
உன் நினைவுகளையும் ,
நான் உறங்கிய பின்னும் உறங்காத
உன் நினைவுகளையும் ...
என்னிடம் இருந்து எடுத்துச் சென்றுவிடு !
ஒரு நாளேனும் வாழ்ந்து பார்க்கிறேன்...
இந்த அழகான வாழ்கையை !!

Friday, 10 September 2010

உனை விட்டுப் பிரிய மனமின்றி...

Quantcast

* நீ வெட்டி வீழ்த்தும்

நகங்கள் கூட

உன்னை

விட்டுப் பிரிய

மனமின்றி

தொட்டுத் தொங்குகின்றன.

* அறியாமையில்

மீண்டும் கடித்து

துப்புகிறாய்

உன்மேல் காதல்

கொண்ட நகத்தை.

உன் கைங்கர்யம்...

Quantcast

* முன்னொரு மழைக்

காலத்தில்

மனம் வெந்து

உடல்குளிர

நனைந்து

உம்மிடத்தில் வந்தேன்.

* உடல் சூடேறி

மனம் குளிர்ந்தது

ஓர் நிமிடத்தில்

உன் கைங்கர்யத்தில்..

என்ன மந்திரம்

வைத்திருக்கிறாய்

உன்னிடத்தில்..

எச்சில் சொந்தங்கள்...

முத்தம்

கொடுத்துவிட்டு

மூடிமறைக்காதே..

உன் எச்சில் பட்ட

என் உதட்டை

சுற்றி

மொய்க்கின்றன

தேனீக்கள் ..

உயிர்நீத்த உதட்டுச்சாயம்...

என் இதழினில்

நீயிட்ட

முத்தத்தில்

இடப்பெயர்வு

ஆன

உன் உதட்டுச்சாயம்

என்னிடம்

சொல்கிறது.

அழகு தேவதையிடமிருந்து

என்னை

அபகரித்து விட்டாயே பாவி..

அவளிதழில்

உயிர் வாழ்ந்தேன்.

உன் உதட்டில்

உயிரிழக்கிறேன் னென்று!!!

Tuesday, 17 August 2010

தேகத் தீண்டல்!!!!!!!!

நெருக்கத்தில் நாம்...
தீண்டல்களின் தீயில்
தகித்துக் கொண்டிருக்கும்
மனங்கள்..!

உன் விரல் கோலத்தால்
உடம்புக்குள் மின்சாரம்...!

தீண்டும் இடங்கள்
தவிர்த்து தீண்டா
இடங்களில் தவிப்பு..!

உலரும் நாவால்
வருடப்பட்டது
உலர்ந்த உதடு..!

உன் நகக் கீறல்களில்
வியர்வை துளிகள் புகுந்து
எரிகின்ற தேகத்திற்கு
எண்ணெய் வார்க்கின்றது..!

இயங்கிக் கொண்டிருக்கும்
உடல்களால் இயக்கம்
மறந்தது இதயம்..!

அறியாப் பருவத்துக்குப் பின்
ஆடைகளின்றி நாம்..!

கூடிக்கலந்த சந்தோசம்
முகத்தில் மட்டுமல்ல
மனதிலும்..!

எழ முயன்றபோது
மீண்டும் என்கிறாய்...
மறுத்தாலும் உன் மடியில்..!

Monday, 16 August 2010

முதல் முத்தம்



உன் இதழுக்கும்
என் இதழுக்கும் நடுவே...
காற்று மட்டும் இடைவெளி நிரப்ப...

சலனமில்லா நொடிப்பொழுதில்...
காற்றுக்கு வெட்கம் வந்து...
சட்டென்று விலகிவிட....

தடுமாறி உன் இதழில்
பதித்தே விட்டேன்

முதல் முத்தத்தை...

Monday, 12 July 2010

மழை இரவு...



ழை ருசித்துக்கொண்டிருக்கும்
விசித்திரமான இரவு இது.
ஒவ்வொரு துளியாய்
மழையின் குருதியை பருகி
திளைக்கிறது இரவு.
இரவின் கண்கள் ஓர்
ஒநாயின் குரூரத்தை கொண்டிருக்கின்றன.
புலன்கள் ஒடுங்கிய அறைக்குள்
கனவுகளின் மரணச்சத்தம்
மெளனமாக ஒலிக்கும் தருணம்
மழையின் ஈரத்தில்
சில்லிடுகிறது உடல்.
ஒரு நீண்ட மெளனத்தின்
நடுவே இரவாக நீயும்
மழையாக நானும் அமர்ந்திருக்கிறோம்.

Friday, 18 June 2010

அழகிய மழைக்காலம்.......

கடலுக்குள் எத்தனை புயல் வந்தாலும் ஊருக்குள் மழை பெய்தால் உள்ளம் துள்ளச்செய்யும். அப்படி துள்ளியதால் பலர் ஊர் சுற்றி எடுத்த சில படங்கள்.

இப்படி காதலியை அணைத்துக் கொண்டு

இது ஒரு அழகிய மழைக்காலம்

Thanks : archlover : D'Art.

மழை முடிந்தும் எழவில்லை துளி

இது ஒரு அழகிய மழைக்காலம்

Thanks : D'Art.

மழை பெய்தாலும் நனையாமல் பயணிக்கலாம் நெடுந்தூரம்

இது ஒரு அழகிய மழைக்காலம்

Thanks : haleyyellow : D'Art.

மலர்களுக்குத் தான் எத்தனை கொடுப்பினை

இது ஒரு அழகிய மழைக்காலம்

Thanks : MartaC : D'Art.

மழை – காமத்தினும் மெலியது

இது ஒரு அழகிய மழைக்காலம்

Thanks : grinzekatze : D'Art.

ஓட்டு வீடும் ஓட்டை வண்டியும்

இது ஒரு அழகிய மழைக்காலம்

Thanks : D'Art.

நீ ஒருவனாவது வெளியில் வந்தாயே

இது ஒரு அழகிய மழைக்காலம்

Thanks : Katarynaa : D'Art.

சீக்கிரம் போக வேண்டும் இல்லையெனில் மழையும் குளிரும் அவளை வாட்டிவிடும்

இது ஒரு அழகிய மழைக்காலம்

Thanks : D'Art.

ஓட்டு ஓட்டு மழை காயும் வரை

இது ஒரு அழகிய மழைக்காலம்

Thanks : D'Art.

ஏய்… என் வீட்டை உடைத்து என்னை வெளியில் தள்ளி விட்டாய்..you..you.. மழை

இது ஒரு அழகிய மழைக்காலம்

Thanks : Aun_Juli : D'Art.

கடமை செய்வோம் – மழையும், நானும்

இது ஒரு அழகிய மழைக்காலம்

Thanks : burcindrummer : D'Art.

இன்னும் சரவணா ஸ்டோர் மட்டும் பாக்கி, போய்விட்டுப் போகலாம்…

இது ஒரு அழகிய மழைக்காலம்

Thanks : olumdenyoksun : D'Art.

இன்று ஏன் நகரம் இவ்வளவு சீக்கிரம் விழித்துக் கொண்டது

இது ஒரு அழகிய மழைக்காலம்

Thanks : lambofgod1 : D'Art.

முத்தம்!!!!!!!!!!!!!!!!!

முத்தம் ஒன்று தந்தவுடன்

மூடிக்கொள்ளும் கண்கள்…

மொத்தமாக கூந்தல் அள்ளி
மூடிக்கொள்ளும் தோள்கள்…

உடல் இறங்கி நீந்தும் என்னை
உயிர் இழுத்து செல்லும்…

ஓய்வு தந்த காரணத்தால்
உடைகள் நன்றி சொல்லும்,

விரலும் விரலும்
இறுகும் பொழுது

முதுகின் சுவரில்
வழியும் விழுது

உறங்கிடாமல் உறங்கிடாமல்
கிறங்கி விடு,

இதழும் இதழும்
இணையும் பொழுது

இமையில் நிலவு
நுழையும் பொழுது

வசதியாக வசதியாக
வளைந்து கொடு…

புயல் முடிந்து போன பின்னே
கடல் உறங்க செல்லும்…

கண் விழித்த அலை திரும்ப
களம் இறங்க சொல்லும்…

உயிர் அணுக்கள் கூடி நின்று
ஓசை இன்றி கிள்ளும்,

ஒரு நொடிக்குள் நூறு முறை
மெத்தை இங்கு துள்ளும்…

இமையின் முடியால்
உடலை உழவா

இளமை வயலில்
புயலை நடவா

இசைத்திடாமல் இசைத்திடாமல்
மூச்சு விடு….

நீண்ட முத்தம்.........


யாருமற்ற கறுகறுத்த பின்னிரவுகளில்

கவிதை வரிகள் எளிதில் கிடைத்து விடுகின்றன

நீ இருக்கும் இரவுகளின் நீட்சி

நவீனத்துவ விரிப்புகளில் சிக்கி

என்னை ஆகடியம் பண்ணுகிறது

நீண்ட அமைதியில் எப்போதும்

என்னை நோக்கியே முடுக்கி விடுகிறாய்

உனதன்பின் ஸ்பரிசங்களை

தினசரி மதிய உணவிலும்

அடுத்தடுத்த அழை பேசி விசாரிப்புகளிலும்

வேலைக்கு சென்ற காலை பொழுதுகளில்

விரிப்புகளை உதறுகையில் இருக்கலாம்

கடைசி இரவில் நீ கொடுத்த

நீண்ட முத்தமும் ,

எழுதி முடிக்காத சில கவிதை வரிகளும்.

Thursday, 6 May 2010

என்னை உனக்குள் வைத்துகொள்கிறாய்!!!!!!

ஞாயிறு காலையில்

நான் சுடும் ஒவ்வொரு தோசைக்கும்

ஒரு முத்தம் என

மூன்று முத்தம் மட்டும் தரும்

கொடுமைகாரி நீ.

——-0O0———-

எப்போதோ நீ எழுதிய

என் பேனாவில்

பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்

உன் வாசனையை

——-0O0———-

எதற்கு பார்த்தாய் என்கிறாய்

சும்மாதான் என்கிறேன்

என்னை சும்மா சும்மா பாத்திட்டே

இருக்க மாட்டயா டா

என காதல் பேசி

திரியும் இந்த அழகு

பிசாசை என்ன செய்வது?

——-0O0———-

மோகமுற்ற பொழுதுகளில்

குகுருப்பாய்

ஒரு பார்வை பார்த்து

மடியில் கிடத்தி

கொஞ்சுவாயே

அதில் சுருண்டு விழுந்து

மரித்து போனவன் நான்

——–0O0———-

எனக்கு இரண்டே ஆசை தான்

உன்னை காதலிப்பது

மற்றும்

உன்னை இன்னும்

அதிகதிமாய் காதலிப்பது

——-0O0———-

உன்னை வம்புக்கிழுத்து

கோபமுட்டி மன்னிப்பு

கேட்கும் இரவுகளில்

வழிந்த கண்ணீரை

துடைத்துக்கொண்டு

இறுக்கி அணைப்பாயே

அதில் உடைந்து போனவன் நான்

——-0O0———-

காலை முதல்

பேசாமல் சண்டைபிடித்து

சாயந்திரம் வீடு திரும்பி

போன் போட்டு

சும்மானாச்சுக்கும் கால் பண்ண

என்று சொல்லும் போதே

கொட்டி விடுகிறது

உன் காதலெல்லாம்

——-0O0———-

சிரித்துக்கொண்டே சிறைபிடிக்கும்

சிறகற்ற யட்சி நீ

தவித்துக்கொண்டே சிறைபடும்

வீழ்த்தப்பட்ட யட்சன் நான்

——-0O0———-

இரவில் இறுக்கி முடிய விழிகளுக்குள்

புகுந்து நர்த்தனம் ஆடிவிட்டு

ஒன்னும் தெரியாத மாதிரி

சாலையில் என்னை கடந்து

செல்கிறாய்

——-0O0———-

நீ காட்டும் உதட்டுச்சுழிப்பில்

கவிதை பொறுக்கிக்கொண்டிருக்கும்

எத்தன் நான்

——-0O0———-

என்னை உன கூடவே வெச்சுக்க்கோடா

என சொல்லும் ஒவ்வொரு கணமும்

என்னை உனக்குள் வைத்துகொள்கிறாய்

Tuesday, 19 January 2010

nice one........

மெல்ல கீழுதடு கடிப்பாய்

கண்களை சுருக்குவாய்

நகங்களினால் பற்களை தேய்பாய்

தேவையற்ற சண்டையிடுவாய்

என்னை விட நாய்குட்டிக்கு தான் காதல்

அதிகமென வாதாடுவாய்

இப்படி ஏதேனும் ஒன்றில்

உட்புகுந்து அன்றைக்கான

கனவின் பிம்பங்களை எடுத்துக்கொண்டு

மெல்ல வீடு சேர்வேன் நான்

அன்றைய இரவின் கனவுக்காக