Friday, 18 June 2010

நீண்ட முத்தம்.........


யாருமற்ற கறுகறுத்த பின்னிரவுகளில்

கவிதை வரிகள் எளிதில் கிடைத்து விடுகின்றன

நீ இருக்கும் இரவுகளின் நீட்சி

நவீனத்துவ விரிப்புகளில் சிக்கி

என்னை ஆகடியம் பண்ணுகிறது

நீண்ட அமைதியில் எப்போதும்

என்னை நோக்கியே முடுக்கி விடுகிறாய்

உனதன்பின் ஸ்பரிசங்களை

தினசரி மதிய உணவிலும்

அடுத்தடுத்த அழை பேசி விசாரிப்புகளிலும்

வேலைக்கு சென்ற காலை பொழுதுகளில்

விரிப்புகளை உதறுகையில் இருக்கலாம்

கடைசி இரவில் நீ கொடுத்த

நீண்ட முத்தமும் ,

எழுதி முடிக்காத சில கவிதை வரிகளும்.

No comments:

Post a Comment