Tuesday, 6 October 2009

ஏனடி என்னை அழவைக்கிறாய் ??????



ஏனடி என்னை அழவைக்கிறாய் ?
இத்தனை அழகாய் இருக்கின்றாய் ;
இத்தனை அழகாய் சிரிக்கின்றாய் ;
இத்தனை இத்தனை அழகாய் இருந்தும் ;
ஏனடி என்னை அழவைக்கிறாய் ?

என் உயிரின் ஊடே நீ கலந்தும் ;
ஏனடி என்னை அழவைக்கிறாய் ?
உனக்கென உயிர் தர நான் இருந்தும் ;
ஏனடி என்னை அழவைக்கிறாய் ?
என் உள்ளும் புறமும் நீ இருந்தும்
ஏனடி என்னை அழவைக்கிறாய் ?

உறவுகள் தவிர்த்தும் ;
உணர்வுகள் தொலைத்தும் ;
நீ “உம் ” என்றால் உயிர் துறக்க நான் இருந்தும் ;
ஏனடி என்னை அழவைக்கிறாய் ?

தென்றல் தீண்ட வலிக்கு மென்றும் ;
பூவை சூட தலை கணக்கு மென்றும் ;
நடந்தால் பாதம் நோகுமென்றும் ;
இதயத்தில் ரத்தத்தை வெளி ஏற்றி ;
இரு கண்களையும் காவல் வைத்து ;
இரவில் உன்னை தூங்க வைத்தும் ;
ஏனடி என்னை அழவைக்கிறாய் ?

என் இதழை தலையணை ஆக்கி வைத்தும் ;
என் இரவுகளால் உன்னை போர்த்தி விட்டும் ;
என் மூச்சு காற்றால் மிதப்படுத்தியும் ;
என் கண்ணீரால் உன் தாகம் தீர்த்தும் ;
ஏனடி என்னை அழவைக்கிறாய் ?

எனக்காய் அழுவதற்கு என் சொந்தம் பலவிருந்தும் ;
உனக்காய்.….
உனக்கு மட்டுமாய்.,,,
ஏனடி என்னை அழவைக்கிறாய் ?

No comments:

Post a Comment