சத்தமாய் மௌனம் பேசு
கண்களால் கவிதை சொல்
புன்னகையால் கோபப்படு
இதயத்தில் கோலமிடு
அன்பாலே சண்டையிடு
வளையல்களால் வார்த்தை பேசு
அசைவுகளால் நடனமிடு
அழியாத முத்தமிடு
கனவுகளில் சத்தமிடு
மலர்களால் வன்முறை செய்
அமைதியால் அதிகாரம் செய்
பார்வைகளால் ரகசியம் சொல்
விரல்களால் என் விதியை தொடு
அன்பை அறிமுகம் செய்
காதலிக்கக் கற்றுக் கொடு
வாழ்க்கைக்கு அர்த்தம் சொல்
ஸ்பரிசங்களால் உயிர் கொடு
சுவாசத்தை மார்கழியாக்கு
இன்பமோ, துன்பமோ
இரண்டிலும் பங்கு கொடு
கல்லறை ஆனாலும் பரவாயில்லை
உன்னருகிலே ஓர் இடம் கொடு
No comments:
Post a Comment