கட்டிலும் கண்ணீர் விட்டு அழுகிறது.
நம் சண்டையில் கட்டிலை
அழவைக்கலாமா?
சரி.. சரி.. என் கட்டிலுக்காக
என்னை கொஞ்சம் கட்டியணைத்துக்கொள்..
உன் தேகம் தொட்ட மழைத்துளி கூட
சூசகமாய் சொல்லிபோகிறது
உன் காதலை....
நான் தேடவில்லை.
என் நிழலுக்குதான்
ஒரு துணை தேவையாம்.
கொஞ்சம் உதவி செய்.
ஆடை எது என்று கேட்டேன்.
சட்டென்று என்னை
அணைத்துக் கொண்டாய்.
காஃபியில் கலந்திருக்கிறதாமே..
எனக்கு தெரிந்தவரை
நான் பருகும் காஃபியில்
உன் காதல் மட்டும்தான் கலந்திருக்கிறது.




No comments:
Post a Comment