நிழல் தொடும் தூரத்தில் நில்.,
தொட்டு பேசுவதை முற்றும் நிறுத்து.,
வீதிக்கண்கள் விசித்திரம் பார்க்குது..
வீடு வரை பின் தொடர்வதை நிறுத்து.,
கொட்டிகிடக்குது குறுஞ்செய்தி.,
கொஞ்சம் குறை.,
தோழியிடம் புலம்பல்..
புளாங்கிதம் பூட்டு.,
திரையரங்கில் படம் மட்டும் பார்.,
ஆளுக்கொரு ஐஸ்கிரீம் சொல்.,
பேருந்தில் பின்னுரசல்..
பலருக்கு கண் எரிச்சல்.,
கழுத்தூறும் விரல் நிறுத்து.,
உன்-காதல் சேட்டைகள் கட்டுப்படுத்து .,
என்னை கொண்டபின் கொள்(ல்)..!!
அது வரை பொறு...

No comments:
Post a Comment